கடற்றொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலி (Galle) பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே பிரதி அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் இழப்பு ஏற்பட்டால் சலுகைகள்
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இதற்காக ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மொத்த மற்றும் பகுதி சொத்து சேதம் மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டால் சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.