முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க

ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் Freedom. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள இப்படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க | Freedom Movie Review

கதை

பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்தின்போது விடுதலைப்புலிகள் சிவராஜன் மற்றும் சுபா ஆகியோர் இதற்கு காரணம் என போலீசாரால் தேடப்படுகின்றனர். அப்போது ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து சிலரை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்து வருகின்றனர்.

அவர்களை இரண்டு வருடங்களாக அங்கு அடைத்து வைத்து, காவல் துறை அடித்து துன்புறுத்தி விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்கின்றனர். இந்த கொடுமைகள் தாங்க முடியாமல், ரகசியமாக Underground-ல் பள்ளம் தோண்டி 43 பேர் தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.

தப்பிக்க முயற்சி செய்தவர்களின் நிலை என்ன என்பதே Freedom படத்தின் மீதி கதை..

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க | Freedom Movie Review

வெறும் பணம் தானே என இருந்தேன், ஆனால்! நடிகர் சசிகுமார் ஓபன் டாக்

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் சசிகுமார் மற்றும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள், நடிகைகளும்
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை தமிழ் பேசி, இலங்கை அகதியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சசிகுமார். அவருடைய நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

வேலூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் அனுபவித்து கொடுமை, கஷ்டங்கள் ஆகியவற்றை இப்படத்தை காட்டியுள்ளனர். அவை வலிகள் நிறைந்த காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க | Freedom Movie Review

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனையை ஏகப்பட்ட நகைச்சுவை காட்சிகளை வைத்து ஜாலியான பொழுதுபோக்கு படமாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எடுத்திருந்தார். ஆனால், இயக்குநர் சத்யசிவா ரத்தமும் சதையுமாக அவர்களது வலியையும் வேதனையும் அனுபவித்து கொடுமையையும் காட்டி Freedom படத்தை எடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையை சுற்றி அகதிகள் முகாமில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த சித்ரவதைகளையும், கொடுமைகளையும் கண்முன்னே காட்டும் வரலாற்று படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்த இயக்குநர் சத்யசிவாவுக்கு பாராட்டுக்கள்.

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க | Freedom Movie Review

படத்தின் அடுத்த பிளஸ் பாயிண்ட் ஜிப்ரானின் பின்னணி இசை. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது. டூரிஸ்ட் பேமிலி படம் போலவே இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் இப்படத்தை பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அது வேறு கதை, இது வேறு கதை. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் கண்டிப்பாக Freedom அனைவரின் மனதையும் தொடும். 

சசிகுமாரின் Freedom திரைப்படம் எப்படி இருக்கு.. விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க | Freedom Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்