புனித பாப்பரசர் பிரான்சிஸின்(pope francis) இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) இருவரும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், இரு தலைவர்களும் இன்றையதினம் மீண்டும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வியக்க வைக்கும் சந்திப்பு
ஆனால் ஓவல் அலுவலகத்தில் நடந்த கொந்தளிப்பான சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தருணத்தின் சந்திப்பு வியக்க வைப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க ட்ரம்ப் முயல்கையில், இந்த உரையாடலும் இன்று பின்னர் நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பும் முக்கியமானாக இருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய இருநாட்டு தலைவர்களும் பங்கேற்பு
இதேவேனை இந்த சந்திப்பிபோது அதில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரும் சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


