கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்திக்கும், நாடாளுன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (27)கிண்ணியா நகர சபையில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, கிண்ணியா நகர சபை தற்போது முகம் கொடுக்கின்ற சவால்கள், எதிர்கால வேலை திட்டங்கள், கழிவு முகாமைத்துவ நிலைய பிரச்சினைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
,கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்களான சனான் முகமட்,
நிஸார்தீன், ரசாட் முகமட், வேந்தன் மற்றும் தீசன் என பலர் கலந்து கொண்டனர்.




