முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் உயிருக்கு போராடும் மக்கள் – உடன் இந்தியாவை அழையுங்கள் – கஜேந்திரகுமார் எம்.பி அவசர கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை
காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை கோர வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அனர்த்த நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற அவசர
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை
தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பேருந்து கல்லோயா
பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. அங்கு மக்கள் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல புதுக்குடியிருப்பு வைத்தியசாலை முழுமையாக
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து
இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூட வசதி இல்லை.

அவசர நோயாளர்களை
வெளியில் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை இருந்தும் கூட அதனை செய்ய முடியாத நிலை
காணப்படுகிறது. அதே போன்று செட்டிகுளம் பகுதியிலும் அதே பிரச்சினை உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சில இடங்களில் உயிருக்கு போராடும் சூழலில் அந்தப்
பிரச்சினையை தீர்க்க முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணம் இலங்கையினுடைய
விமானப்படைக்கும் கடற்படைக்கும் இராணுவத்திற்கும் உதவி கேட்டும் கூட அவர்களால்
அந்த உதவியை செய்ய முடியாத ஒரு வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

செட்டிகுளம் பகுதியை எடுத்துக்கொண்டால் தண்ணீர் வேகத்திற்கு கடற்படை படகுகளை
கொண்டு அந்த இடங்களை அடைய முடியாத நிலை உள்ளது என்பது
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த படகுகளும் அடிபட்டு செல்வதற்கான வாய்ப்புகள்
இருப்பததாக கூறப்படுகிறது. விமானம் ஊடாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு உதவி
செய்வதென்றால் கூட விமானங்களை தற்போதைய காலநிலையில் பறக்க முடியாத நிலை
காணப்படுகிறது.

காலநிலை சீரான பின்னரே இதனை செய்ய முடியும் என கூறுகிறார்கள்.
நிலமைகள் முன்னேறும் வரைக்கும் இருந்தால் அந்த உதவிகள் தேவைப்படாது.

அதற்கு
முதல் அந்த மக்களை ஏதோவொரு வகையில் நாங்கள் காப்பாற்ற வேண்டும்.

இலங்கை கடற்படையினுடைய 75வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய
கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் இங்கு வந்திருக்கிறது.

தங்களுடைய வளங்களை இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
செய்வதற்கு முழுமையாக ஈடுபடுத்துவதற்கு தயார் என இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை
வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள கடற்படை விமானப்படையின் பலத்தை இலங்கையின் கடற்படைக்கும்
விமானப்படைக்கும் உள்ள பலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. தீர்க்க
முடியாத விடயங்களை கூட சுகமாக தீர்க்கக்கூடிய வல்லமை இந்திய கடற்படைக்கும்
விமானப்படைக்கும் இருக்கும். இந்த கோரிக்கை அவசரமாக இந்திய தூதரகம் ஊடாக
வலியுறுத்துகிறோம்.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்காமல்
இருப்பதற்கான பிரதான காரணம் முப்படைகளினுடைய வளப் பற்றாக்குறை என்பதே உண்மை என
இன்றைய கூட்டத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

அரச தரப்பு இந்த விடயத்தில்
அக்கறை காட்டும் நிலையில் இல்லை.

நிதி உதவிகள் இருந்தாலும் மக்களின் உயிர்களை காப்பாற்றுவது வேறு விடயம்.

இடம்பெயர்ந்து முகாமில் இருக்கும்போது உதவிகளை செய்வது வேறு. ஆனால் உயிருக்கு
போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நாங்கள் இதை பார்த்துக் கொண்டிருக்க
முடியாது. இதை அவசரமாக செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தூதரகத்திடமும் ஒரு கோரிக்கையை விடுகின்றோம்.
தயவு செய்து இந்த நிலைமை விளங்கிக் கொண்டு அரசாங்கம் நேரடியாக இந்திய
தூதரகத்தை அணுகி இந்த பிரச்சனையை தீர்க்க ஆலோசனை பெற வேண்டும்.

இந்தியா உதவ
வேண்டும் என்பது எங்களுடைய வலியுறுத்தல்.

இந்திய தூதரகம் வடக்கில் இருக்கக்கூடிய நிலைமைகளை ஏதோவொரு வகையில் தீர்த்து
வைப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க இயன்றளவு
பங்களிப்பை செய்வதற்கு அவசரமாக முன்வர வேண்டும்.

எங்கள் பார்வையில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் நாளைக்கு காலையில்
காப்பாற்றபடாவிட்டால் மறுநாள் காப்பாற்றலாமோ என்ற கேள்விகளும் எழும். அரசு
தரப்பினுடைய அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை இந்த கூட்டத்தில்
வலியுறுத்தினார்கள்

சுய கௌரவத்தை பார்த்துக் கொண்டு வராமல் அரசாங்கம் உலகத்திலேயே மிகப் பலமான ஒரு
கடற்படையும் விமானப் படையையும்
கொண்டு நாட்டினுடைய அனர்த்தம் இருக்கிற இடத்தில் அவர்களும் முழுமையாக உதவி
செய்ய தயார் என்று கூறிய நேரத்தில் அந்த உதவியை பெற வேண்டும் என அவசரமாக
கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியா தொடர்பான அரசாங்கத்தின் பழைய சிந்தனைகளை வைத்துக்கொண்டு செயற்பட
முடியாது. மக்களை காப்பாற்றுவதாக இருந்தால் அவசரமாக இந்த விடயத்தை செய்ய
வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும் இது சவாலாக மாறிக்கொள்கிறது – என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.