ஜேவியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜேவியின் எக்கிய
இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது,அவ்வாறானால் ஜேவிபி பிழையென்றால்
ஜேவியின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை மக்கள்
சிந்திக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
களுவன்கேணியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை தமிழ் தேசிய
நிலைப்பாட்டிலிருந்து விலகவைத்துள்ளதாக இலங்கையில் உள்ள தூதரகங்கள்
கூறிவருகின்றன.
அதற்கு பலவிதமான பதில்களை சொல்லிவருகின்றோம்.மக்கள் சக்தி என்ற
பெயரில்ஆட்சிசெய்கின்ற ஜேவிபி என்கின்ற அமைப்பு வடகிழக்கில் தமிழ் மக்களின்
ஆணையைப்பெறவில்லையென்பதை தெளிவாக கூறிவருகின்றோம் என குறிப்பிட்டு்ள்ளார்.

