கேம் சேஞ்சர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமான முறையில் வெளிவந்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.
இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரித்துள்ளார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.
அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்… பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம்
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம் சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் நாள் ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாளின் இறுதி வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.