கேம் சேஞ்சர்
வருகிற 10ஆம் தேதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ. 450 முதல் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
தமிழகத்தில் விடுதலை 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ
ப்ரீ புக்கிங்
கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது சற்று ஆவெரேஜ் ஆன வசூலை தான் ப்ரீ புக்கிங்கில் பெற்றுள்ளது என கூறுகின்றனர்.
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் ரூ. 8 கோடி வரை மட்டுமே வசூல் ஆகியுள்ளது.
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இப்படியொரு நிலைமையா. பொறுத்திருந்து பார்ப்போம் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.