அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தி இருந்ததற்காக 5 கோடி நஷ்டஈடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அந்த பாடல்களின் உரிமையை பெற்று இருக்கும் நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் பயன்படுத்தி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து இருந்தது.
கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. சாய் சுதர்சன் பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க
கங்கை அமரன்
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ” 7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க, ஹிட் ஆகல.. எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது, அப்போ எங்களுக்கு கூலி வரணும்ல, பணத்தாசை எல்லாம் இல்லைங்க” என பேசி இருக்கிறார்.
குட் பேட் அக்லீ பட இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷால் ஹிட் கொடுக்க முடியாமல் தான் இளையராஜா பாடலை பயன்படுத்தி இருப்பதாக அவர் இப்படி நேரடியாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.