இயக்குனராக பல ஹிட் படங்கள் கொடுத்த கௌதம் மேனன் சமீப காலமாக நடிகராக தான் படங்களில் தோன்றி வருகிறார். குறிப்பாக போலீஸ் ரோல் என்றால் அதில் இவரை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அவ்வளவு பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி கேட்டபோது ‘அது என் படம் இல்லை, வேறு யாரோ ஒருவருடைய படம்’ என கூறி இருந்தார்.
தனுஷ் நடித்த படத்தை அவர் இப்படி சொல்லிவிட்டாரே, அப்போது அதை இயக்கியது தனுஷ் தானா என்றெல்லாம் இணையத்தில் விவாதம் நடந்தது.


ராஜமௌலியிடம் பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்! இந்தியாவில் எந்த நடிகையும் பெறாத தொகை
ஜோக்-காக சொன்னேன்
இந்நிலையில் கௌதம் மேனன் தற்போது சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த விஷயம் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“நான் ஜோக் ஆக தான் அந்த விஷயத்தை சொன்னேன். அது என் சொந்த படம். நான் தான் அதை தயாரித்தேன். அந்த ஒரு படத்தை மட்டும் தான் என்னால் நினைத்த அளவுக்கு எடுக்க முடியவில்லை.”
“நான் ஜோக் ஆக சொன்ன ஒரு விஷயத்தை இப்படி எடுத்து பெரிதாக்கிவிட்டார்கள்” என அவர் விளக்கம் கொடுத்தார்.
முழு பேட்டியை பாருங்க.

