காசா(gaza) பகுதியில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கில் நாளை(19) போர்நிறுத்தம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
15 மாதங்களாக நீடித்த காசா போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பது தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அமெரிக்கா(us), கத்தார்(qatar) மற்றும் எகிப்து(egypt) ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று (17) ஒப்புதல் அளித்தது.
இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தம்
அதன்படி, இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த போர் நிறுத்தம் ஆறு வாரங்கள் அல்லது தேவைப்பட்டால் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
இதன் போது இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் இருந்து விலகும்.
காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறும்
காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், போரினால் சேதமடைந்த நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் அப்படியே செயல்படுத்தப்பட்டால், இஸ்ரேலியப் படைகள் தொடக்கத்திலிருந்து 16 நாட்களுக்குள் காசா பகுதியில் இருந்து முழுமையாக திரும்பப் பெறப்படும்.
ஒக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து 1,200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர் மற்றும் மேலும் 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 47,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் காசா பகுதியை இடிபாடுகளாக மாற்றியது.