முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் தாக்குதலின் உச்சக்கட்டம்: காசா பகுதியில் உயிரிழப்பு பெருக்கம்

காசா (Gaza) முனையில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனஇஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

காசா முனை

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இஸ்ரேல் தாக்குதலின் உச்சக்கட்டம்: காசா பகுதியில் உயிரிழப்பு பெருக்கம் | Gaza Toll Rises 72 Killed Total Now 54 321

அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆயுதக்குழு

தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில், இதில் 25 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலின் உச்சக்கட்டம்: காசா பகுதியில் உயிரிழப்பு பெருக்கம் | Gaza Toll Rises 72 Killed Total Now 54 321

காசா முனையில் இஸ்ரேல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தநிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் காயமடைந்துள்ளதுடன் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்