ரஷ்யாவின் (Russia) இராணுவ பலம் அதிகரித்து வரும் நிலையில் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜேர்மனி (German) தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது.
இதன் படி, நேற்றையதினம் (04) ஐரிஸ்-டி வான் பாதுகாப்பு அமைப்பை (Iris-T air-defence system) ஜேர்மன் நிறுவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பாதுகாப்பு அமைப்பானது, எதிரி நாடுகளால் ஏவப்படும் ரொக்கெட் , ட்றொன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ஆயுத பலம்
இந்த நிலையில், ரஷ்யாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதை உணர்ந்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், அதனை அறிந்தும் பாரா முகமாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கவன் குறைவாக செயற்பட்டால் தனது நாட்டின் அமைதிக்கு பங்கம் உருவாகிவிடும் என்றும் அதனை தன்னால் அனுமதிக்கமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேட்டோ எச்சரிக்கை
இதேவேளை, ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் நேட்டோ நாடுகளை தாக்குவதற்கு ரஷ்யா இராணுவ ரீதியாக தயாராக இருக்கலாம் என நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், போலந்தும் தனது பீரங்கி குண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன் படி, போதுமான இருப்பை உறுதி செய்யும் வகையில் 155 மிமீ பீரங்கி குண்டுகள் உற்பத்தியை அதிகரிக்க போலந்து தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.