ரீ ரிலீஸ்
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு ரஜினிகாந்தின் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. விரைவில் கில்லி ரீ ரிலீஸ் வசூலை விட படையப்பா அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கில்லி – படையப்பா
இந்த நிலையில், படையப்பா மற்றும் கில்லி ஆகிய இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்து ஒப்பீடு ரசிகர்கள் மத்தியில் நடந்து வருகிறது. ஒரு தரப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா வசூல்தான் அதிகம் என்றும், மற்றொரு தரப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி படத்தின் வசூல்தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.


ரீ ரீலிஸில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. சென்சேஷனல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
உண்மையான வசூல் விவரம்
இப்படியொரு சூழல் இருக்க, இந்த இரண்டு திரைப்படங்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா தமிழ்நாட்டில் ரூ. 29 கோடியும், உலகளவில் ரூ. 60 கோடியும் வசூல் செய்தது. 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி தமிழ்நாட்டில் ரூ. 25 கோடியும், உலகளவில் ரூ. 37.5 கோடியும் வசூல் செய்தது. இதுவே இந்த இரு திரைப்படங்களின் உண்மையான வசூல் விவரம் என கூறப்படுகிறது.


