விஜய் நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான கில்லி படம் தற்போது ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது.
மேலும் நல்ல வசூலும் வந்து கொண்டிருப்பதாக தகவல்களும் வருகிறது. விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக இருக்கிறார். தற்போது அவரது படத்தின் ரீரிலீசுக்கே மிகப்பெரிய வசூல் வந்திருப்பது சினிமா துறையில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு படமாவது பண்ணுங்க..
இந்நிலையில் சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் சக்திவேலன் விஜய்யை நேரில் சந்தித்து பெரிய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
“தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் சிலிர்ப்பை தந்தது. திரைத்துறை நலனுக்காக நீங்க தொடர்ந்து நடிக்க வேண்டும். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க” என அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Today, @sakthivelan_b sir from Sakthi Film Factory had the pleasure of meeting Thalapathy @actorvijay to congratulate him on the massive blockbuster re-release of #Ghilli, brought to you by SFF. During the meeting, Sakthivelan Sir requested #ThalapathyVijay to consider acting in… pic.twitter.com/I4ym7zhxj0
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) April 24, 2024