யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாவாந்துறை பகுதியை சேர்ந்த
பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

