தனது பெற்றோருடன் கடலில் நீராடச் சென்ற நான்கு வயதுச் சிறுமியொருவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தங்காலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலைப் பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்றிருந்த குழுவொன்றைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அவரைக் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போதைக்கு தங்காலை மருத்துவமனையில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

