இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவிகள் மதுவாங்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். கடைக்காரர் எந்தவித கேள்வியுமின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்குகின்றார்.
விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதி
இது தொடர்பான காணொளி வெளியானதை அடுத்து, துணை கலெக்டர், தாசில்தான், காவல்துறையினர் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் காணொளியை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணை
இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
https://www.youtube.com/embed/COMs60PsTN0

