குட் பேட் அக்லி
இன்று வெளிவந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் வசூல்
இப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ஏற்கனவே தகவல் கூறப்பட்டன. இந்த நிலையில், வெளிநாட்டில் குட் பேட் அக்லி முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 20 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.. இதோ
அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை ஆதிக் இயக்க, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.