குட் பேட் அக்லி
இந்த வருடம் வெளியாகி தமிழ் சினிமாவில் சரவெடி கலெக்ஷன் பெற்ற ஹிட் படங்களில் ஒன்று குட் பேட் அக்லி. அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி இருந்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப் என பலர் நடித்திருந்தனர். ரூ. 270 கோடி செலவில் உருவான இந்தப் படம் செம வசூல் வேட்டை செய்தது.
வசூல் ஒருபக்கம் இருக்க ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் நமக்கே புரிந்திருக்கும்.

தொலைக்காட்சி
படம் வெற்றிப்பெற்றாலும் இசை சம்மந்தமாக நிறைய பிரச்சனைகளை படம் சந்தித்தது. இப்பட வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக்குடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் போட்டிகள் முடிந்த கையோடு படப்பிடிப்பில் இணைகிறாராம்.
இப்போது என்ன தகவல் என்றால் திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 2026ம் வருடம் பொங்கல் ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

