குட் பேட் அக்லி
அஜித், த்ரிஷா இணைந்து நடிக்க இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.
இதில் வசூலில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அதே போல் மலேசியாவை புகழ்பெற்ற தமிழ் பாடகர் டார்க்கி இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி புலி புலி என்கிற பாடலை பாடியிருந்தார்.
இப்படத்தில் அந்த பாடல் இடம்பெறும் காட்சி திரையரங்கம் தெறித்தது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு மாஸாக இருந்தது.
மலேசியா வசூல்
இந்த நிலையில், இப்படம் மலேசியாவில் மட்டுமே இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் மலேசியாவில் இதுவரை ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் சாதனை என்கின்றனர்.