குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளிவந்தது.
இப்படத்தை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் ட்ரீட் தரும் வகையில் குட் பேட் அக்லி படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார்.
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. மீண்டும் மேடையில் பிரியா வாரியர் ஆடிய டான்ஸ்! வீடியோ இதோ
அஜித்தின் ஃபேன் பாய் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக காத்திருக்கும் GBU திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.