குட் பேட் அக்லி
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார். மேலும் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகிய போஸ்
ப்ரீ புக்கிங்
நாளை இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், படத்தை திரையுலகில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இப்படத்தின் முதல் நாள் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்று.