முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி திரை விமர்சனம்

அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் – மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அஜித்தின் ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள GBU சம்பவம் செய்ததா? விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

கதைக்களம்

அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் திரிஷா.

இதனால் அஜித் போலிஸிடம் சரண்டர் ஆகி, திருந்தி 17 வருடம் கழித்து தன் பழைய கேங்ஸ்டர் வாழ்கையை மறைத்து மகனை பார்க்க வருகிறார்.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

அப்படி பார்க்க வந்த இடத்தில் அஜித் மகனை அர்ஜுன் தாஸ் போலிஸிடம் ஏதோ ஒரு காரணத்துகாக சிக்க வைக்கிறார். இதனால் குட் இருந்த அஜித் பேட் ஆக மாறுகிறார்.

அர்ஜுன் தாஸ் ஏன் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பினார் காரணத்தை தெரிந்து தன் மகனை ஜெயிலில் இருந்து AK மீட்டாரா என்ற சரவெடியே இந்த GBU மீதிக்கதை. 

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

படத்தை பற்றிய அலசல்

அஜித் ஒன் மேன் ஷோ தான் இந்த குட் பேட் அக்லி. ஆதிக் ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார், இந்த அஜித்தை தானயா கேட்கிறோம் என ரசிகர்கள் ஆர்பரிப்பு தான் அஜித்தின் பெர்ப்பாமன்ஸ் படம் முழுவதும்.

குட் அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்க மகனுக்காக பேட் ஆக மாற அவர் எடுக்கும் செய்யும் காட்சிகள் சரவெடி தான். அதிலும் இடைவேளை போது பேங் ஆ, மொட்டையா என்ற காட்சி மங்காத்தா பிறகு ஒரு அடி தூள் இண்டர்வெல்.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

இரண்டாம் பாதி தொடங்கியதும் அஜித் யார் என்ற ப்ளாஷ்பேக் அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என 10 தீபாவளி காட்டியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரசன்னா, சுனில் எல்லாம் அஜித்துடன் கூடவே வந்து, அவ்வபோது அஜித்தை பில்டப் செய்யவே மட்டும் தான் வருகிறார், படத்தில் பல சர்ப்ரைஸ், சிம்ரன் எண்ட்ரி, அதை கையண்ட விதம் என அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்க் விருந்து தான்.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

அர்ஜுன் தாஸ் இவர் எப்படி அஜித்திற்கு வில்லன் என கேட்டவர்களுக்கு நல்ல பதிலடி, 2கே கிட்ஸ் அஜித்தை வம்பு இழுத்தால் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.

படம் முழுவதும் அஜித் ரெபரன்ஸ் என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருக்கட்டும் என நினைத்தார் போல ஆதிக், ஏதாவது வந்துக்கொண்டு இருக்கிறது.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

அதே நேரத்தில் இந்த பழைய பாடல், சவுண்ட் எல்லாம் ஒரு கோட்டத்திற்கு மேல் போதும்ப்பா என்ற சலிப்பையும் தட்டுகிறது, ஆதிக் அதை கொஞ்சமாக பயன்படுத்துங்கள், லாஜிக் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்க கூடாது போல.

படம் டெக்னிக்கலாக இசை ரசிகர்களுக்கு விருந்து என்றாலும், சத்தம் கொஞ்சம் ஓவர் டோஸ், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, அதே நேரத்தில் ஒரு சில இடங்கள் ஏன் அத்தனை மங்கலாக உள்ளது என கேட்க வைக்கிறது.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

க்ளாப்ஸ்

அஜித் அஜித் அஜித்.

அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகள்.

சண்டை காட்சிகள், மாஸ் மொமண்ட்.

பல்ப்ஸ்

ஓவர் சத்தம் சலிப்பு வருகிறது.

பல காட்சிகளில் லாஜிக்கை கழட்டி வைத்துள்ளனர். 

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஓர் அஜித் ரசிகர் வைத்த அறுசுவை விருந்தே இந்த Good Bad Ugly.

குட் பேட் அக்லி திரை விமர்சனம் | Good Bad Ugly Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.