குட் பேட் அக்லி
பாக்ஸ் ஆபிஸில் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் கழித்து அஜித்தை இப்படி பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறினார்கள். இது அஜித்தின் செம மாஸ் கம் பேக் ஆக பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பின் எப்படி இருக்கு.. பிரியங்கா தேஷ்பாண்டே என்ன கூறியுள்ளார் பாருங்க
தமிழக வசூல் விவரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், முதல் நாளே ரூ. 30.9 கோடி வசூல் செய்து இப்படம் சாதனை படைத்தது. இந்த நிலையில் 11 நாட்களை வெற்றிகரமாக GBU கடந்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது.