குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா மகளா இது?.. குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன் படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
அவர் தான்
இந்நிலையில், குட் பேட் அக்லி படம் குறித்து இயக்குநர் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” குட் பேட் அக்லி படத்தில் இருக்கும்
மூன்று கேரக்டர்கள் அனைவருக்குள்ளுமே இருக்கும்.
இந்த படத்திற்கான டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அவர் இந்த பெயரை கொடுத்தது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்று கூறியுள்ளார்.