அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்று கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
தற்போது, கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித்தின் நடிப்பில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த முடிவுக்கு காரணம் பிரியங்கா அக்கா தான்.. பிக் பாஸ் அன்ஷிதா உடைத்த ரகசியம்
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
குட் பேட் அக்லி ரிலீஸ்?
இப்படம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, குட் பேட் அக்லி படத்தில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.