அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் பிப்ரவரி 28ம் தேதி இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால் அஜித் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் மூன்று விதமான ரோல்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் வில்லத்தனமான ரோல் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
டீசர் ரன் டைம்
இந்நிலையில் டீஸர் ரன் டைம் 1 நிமிடம் 34 நொடிகள் என்கிற தகவல் வெளிவந்திருக்கிறது.
மேலும் டீஸர் சென்சார் சான்றிதழும் வெளிவந்து இருக்கிறது. அதனால் குட் பேட் அக்லி டீஸர் தியேட்டர்களில் மற்ற படங்கள் உடன் வெளிவருவதும் உறுதி ஆகி இருக்கிறது.
Teaser Censored Done 🔥 Theatre la Murattu Sambavam iruku #GoodBadUgly pic.twitter.com/LPGWK1F5DC
— AURA (@sarcasmvishnu_) February 26, 2025