முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச மீது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதுபோன்ற முறைப்பாடுகள், உரிய தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணையை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பில் ஊழல் எதிர்ப்பு மற்றும் மோசடி எதிர்ப்பு சிவில் அமைப்புகள் முன்வைக்கவுள்ளன.
வழக்கறிஞர்கள் பகுப்பாய்வு
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த அமைப்புகள் சமீபத்தில் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட தலையீட்டில் செய்த சில கட்டுமானங்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நில மீட்புக் கூட்டுத்தாபனம் மூலம் செய்த சில பணிகள் தொடர்பான தகவல்கள் அடங்கும்.

இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களை வழக்கறிஞர்கள் குழுவொன்று பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

