முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

திறமையான தொழிலாளர்களை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்ப்பதற்காக கறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடியேற்ற திட்டம்

இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பையும் வெளிநாட்டவர்களுக்கு கனடா அரசு அளிப்பதாக சு்ட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஊரக சமூக குடியேற்ற திட்டம் (RCIP) ஊரக பகுதிகளில் (சிறிய டவுன், கிராமப்புறங்கள்) நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | Gov Employment In Canada With Permanent Residency

இந்த திட்டம் மூலம் உள்ளூர் நிறுவனங்கள், அதாவது இப்பகுதிகளில் இருக்கும் நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுடன் இணைக்கப்படுவார்கள்.

இந்த திட்டம் பல மாகாணங்களில் 18 பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

மேம்பாட்டு அமைப்பு

இதன்மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புடன் நிரந்த குடியுரிமையும் கிடைக்கும்.

அதேபோல், இரண்டாவது திட்டமான பிரெஞ்சு பேசும் சமூக குடியேற்றத் திட்டம் (FCIP), சிறுபான்மையின பிரெஞ்சு பேசும் சமூகங்களுக்கு (கியூபெக் தவிர்த்து), பிரெஞ்சு பேசும் மக்களை அதிகளவில் குடியேற்ற உதவும் திட்டமாக இத்திட்டம் செயல்படுகிறது.

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | Gov Employment In Canada With Permanent Residency

இவ்விரு திட்டங்களும் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கனடா குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) இடையே இணைந்து செயல்படும்.

முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறையை உள்ளூர் அமைப்புகள் தங்கள் சமூகங்களில் அடையாளம் கண்டு இந்த துறையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்றுள்ள ஊழியர்களை நியமிக்க வழிவகை செய்கிறது.

வேலை வாய்ப்பு

இந்த திட்டங்களுக்கு கீழ் விண்ணப்பம் செய்பவர்களை ஆய்வு செய்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நம்பகமான நிறுவனங்களை நியமித்து பணியில் அமர்த்தி அந்த நிறுவனங்கள் நிரந்தர குடியுரிமைக்கு தகுதியானவரை பரிந்துரைக்கும்.

குறிப்பிட்ட தகுதிகளை இந்த திட்டங்களுக்காக பூர்த்தி செய்ய வேண்டும்.

பின் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் வேலை ஆணையை முதலில் பெற வேண்டும்.

அதன் பின் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு தகுதி அடைய முடியும் எனினும், இந்த வேலை வாய்ப்பை பெற சில முக்கியமான தகுதிகள் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | Gov Employment In Canada With Permanent Residency

  1. இந்த வேலை தொடர்புடைய அனுபவம் மற்றும் மொழி திறன் தேவைகள் ஆகியவை அடங்கும்.
  2. கனடாவிற்கு வெளியே கல்வி பயின்ற விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ் மதிப்பீட்டையும் வழங்க வேண்டும்.
  3. கூடுதலாக, அனைத்து விண்ணப்பதாரர்களும் கனடாவில் தங்கள் குடும்பத்தினரை நிர்வாகம் செய்துகொள்ளும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
  4. சுகாதாரத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறிப்பாக செவிலியர் உதவியாளர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் போன்றோர் அதிக தேவை உள்ளவர்கள் மற்றும் இந்தத் திட்டங்களுக்கு தகுதியானவர்கள்.
  5. மேலும், சுகாதாரத்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக Work Permit பெற்றவர்களாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.