கனடாவின் (Canada) கியூபிக் மாகாணத்திலுள்ள மருத்துவர்களுக்கு தங்களது சேவை தொடர்பில் புதிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த எச்சரிக்கையை கனடிய கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே (Christian Dubey) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபிக் பொதுச் சுகாதார வலயமைப்பில் வழங்கத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை
இதனடிப்படையில், குறித்த நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறும் மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் டொலர் அபராதத்தை செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால நிபந்தனையை பூர்த்தி செய்ய முன்னதாக தனியார் துறையில் அல்லது மாகாணத்திற்கு வெளியில் மருத்துவ சேவையை வழங்கினால் அவர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பணம்
புதிய மருத்துவர் ஒருவரை பயிற்றுவிப்பதற்காக மாகாண அரசாங்கம் சுமார் நான்கரை லட்சம் டொலர்களை செலவிடுவதாகவும் வதிவிடத்திற்காக சுமார் எட்டு இலட்சம் டொலர்களை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களின் பணத்தை கொண்டு கற்றவர்கள் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.