நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S.M. Marikkar )கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மரிக்கார்,
எப்பேது ஒழிக்கப்போகின்றீர்கள்
நாட்டிற்கு முன்னர் உறுதியளித்தபடி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை எப்போது ஒழிக்க விரும்புகிறது என்பதை தெளிவாகக் கூறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நீண்ட காலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், இந்த நீண்டகால உறுதிமொழியை நிறைவேற்றும் திறன் அதற்கு உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.