நிதித்திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பணம் அச்சிடுதல் மற்றும் நிதி திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு போதியளவு தெளிவு கிடையாது எனவும், போதியளவு தெளிவற்ற அரசாங்கம் ஊடகங்கள் மீதோ அல்லது வேறும் தரப்பினர் மீதோ குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பரத்தலமுல்ல சீலரதன தேரருக்குக் கூட நிதி திரவத்தன்மை பற்றிய தெளிவு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் போதியளவு தெளிவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்பில் உதய ஆர் செனவிரட்ன அறிக்கை தொடர்பில் போலி தகவல் வெளியிட்டமைக்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசியல் சாசனம் பற்றி அவர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.