முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மில்லியன் ரூபாய் மோசடியில் சிக்கிய அரச ஊழியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

77 மில்லியன் ரூபாய் மோசடியில் சிக்கிய அரச ஊழியர் இருவருக்கு எதிராக விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண (Sabaragamuwa Province) சபையின் பெண் உதவி இயக்குநர் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள ஒரு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் இருவருக்கு எதிராகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நநிலையில், குறித்த இருவரையும் மே எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய (Embilipitiya) நீதவான் திலின மகேஷ் பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இருவரும் கைது 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சப்ரகமுவ மாகாணத்தில் 77 சாலை மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து, சபைக்கு 77 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குறித்த இருவரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மில்லியன் ரூபாய் மோசடியில் சிக்கிய அரச ஊழியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Government Employees Caught In 77 Million Fraud

இதையடுத்து, குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறான ஆவணங்கள்

இந்தநிலையில், சப்ரகமுவ மாகாணத்தில் 77 சாலை மற்றும் விளையாட்டு மைதான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், சாலைகள் அல்லது விளையாட்டு மைதானங்கள் உண்மையில் கட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு தணிக்கை விசாரணையின் மூலம் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

மில்லியன் ரூபாய் மோசடியில் சிக்கிய அரச ஊழியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Government Employees Caught In 77 Million Fraud

சப்ரகமுவ மாகாண சபை நடத்திய விசாரணைகளில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட்பட 77 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகக் கூறி தவறான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தற்போது விளக்கமறியலை நீடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்