அரச ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் போது நாட்டின் நிலைமை குறித்து மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.
கலவரங்களால் தமது சொந்த பிள்ளைகளின் எதிர்காலம் இழக்கப்படும் என அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் அதிபர் தேர்தல் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஹொரண மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச பிரதிநிதிகளின் விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள் வேடிக்கைக்காக பொய் சொல்லும் மரபை நிறுத்த வேண்டும் என்றும் அபேவர்தன கூறினார்.