முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் – தேசப்பிரிய காட்டம்

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து
வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் எனத் தேர்தல்
விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதால், அதனை நடத்தாமல் ஆளுநர்கள் ஊடாக
நிர்வாகத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.

மக்கள் சபையை நிர்வகிக்க வேண்டுமெனில் மக்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு
செய்யப்பட்ட பிரதிநிதிகள் அவசியம் என மாகாண சபைகள் தொடர்பான வழக்கு
விசாரணையொன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் - தேசப்பிரிய காட்டம் | Government Hold The Provincial Council Election

ஆளுங்கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதி

தேர்தல் நடத்தப்படாமல் அது ஒத்திவைக்கப்பட்டு வருவது ஜனநாயக விரோதமாகும்.

ஆளுங்கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஒரு
வருடத்துக்குள் பழைய முறையிலேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி இருக்கலாம்.
அவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.

ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் - தேசப்பிரிய காட்டம் | Government Hold The Provincial Council Election

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள தடையை நாடாளுமன்றத்தால் மாத்திரமே
தற்போது நிவர்த்தி செய்ய முடியும். எந்த முறைமையின் கீழ் தேர்தல் என்ற
முடிவுக்கு வரவேண்டும்.

பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக இருந்தால்
அடுத்த வருடம் முற்பகுதியில் அதனைச் செய்ய முடியும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணி வசம் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூட
இன்னும் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.” – என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்