இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில்
இலங்கைக்கு வருகை தர உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்
விஜித ஹேரத் இதனை அறிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தங்கள்
நாடாளுமன்றத்தில், இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர், இந்த விஜயத்தின் போது
இரண்டு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று
எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எனினும், குறித்த ஒப்பந்தங்கள் குறித்த மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.