தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி எனும் பெயரில் புதிய சமூக வலுவூட்டல் செயற்திட்டமொன்று
முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்புரித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அதனூடாக சமூகத்தை வலுவூட்டுதல் இதன் நோக்கமாகும்.
மத்திய அரசாங்கத்தின் முக்கியமான ஒன்பது அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் இந்த செயற்திட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

அங்குரார்ப்பண வைபவம்
இதற்கான அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் ஜுலை மாதம் 04ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

