அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுகளின் ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்,
சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள்
சாதாரண சட்டத்தில் செய்ய முடியாத சில செயற்பாடுகளை அவசரகால சட்டத்தில் செய்ய முற்படுகின்றது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஒன்றை கூறிவிட்டு இரு அமைச்சர்களை அனுப்பி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை முடக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதன் பின்னரான உண்மை விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மக்களுக்கு தெரியவரக்கூடாது என அரசு நினைக்கின்றது.
அரசாங்கத்தின் பிழைகளை மூடி மறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாகவே நாம் நோக்குகின்றோம் என்றார்.

