சீனா அல்லது ரஷ்யாவைப் போன்ற ஆட்சி முறையொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று (29.10.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சீனாவில் அல்லது ரஷ்யாவில் நடப்பதைப் போன்ற தனிக்கட்சி ஆட்சி முறையொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
ஜனநாயகத்திற்கு ஆபத்து
அதன் பின் நாட்டில் ஜனநாயகமோ, ஏனைய கட்சிகள் அரசியல் செய்வதற்கான வாய்ப்போ இருக்காது.
அந்த மாற்றங்கள் எப்போது ஏற்படும் என்று கூற முடியாது.

ஆனால் அரசாங்கம் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

