எதிரணிகள் மற்றும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி ஆட்சியை
முன்னெடுப்பதற்கு அநுர அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது.
அதனை தற்போது நிறைவேற்ற முடியாதுள்ளதால் நாடாளுமன்றத்தில் எதிரணியையும்,
வெளியில் அரசாங்க ஊழியர்களையும் அச்சுறுத்தல் மூலம் ஒடுக்கி ஆட்சியை நடத்தப்
பார்க்கின்றது.
பொலிஸாருக்கு இடமாற்றம்
ஜனாதிபதி அண்மையில் பொலிஸ் ஆணைக்குழுவை விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து
139 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த அரசியலையே தற்போது நடத்துவதற்கு
அரசாங்கம் முற்படுகின்றது. தமது அரசியல் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக்
கொள்வதற்காகவே இவ்வறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.