2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இன்று (15) இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தேர்தல் நெருங்கும் போது, கடந்த அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று திடீர் முடிவொன்றை எடுத்தது.
புதிய முடிவு
ஆனால் நாங்கள் விசாரித்தபோது அதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. உண்மையில் இதன் மூலம் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
சம்பளத்தை உயர்த்துவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. நிறைவேற்ற முடியுமா? எப்படி? நிதி நிலைமையை வைத்து புதிய முடிவை எடுப்போம். இல்லை என்று சொல்ல மாட்டோம்.நிதி நிலையைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.