முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயங்கரவாததடை சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறையில் வைப்பதே அரசின் திட்டம்! அருட்தந்தை மா.சத்திவேல்

பயங்கரவாததடை சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறையில் வைப்பதே அரசின் திட்டம்.
நீதி அமைச்சரோடு நடத்திய பேச்சில் அவர்களின் நிலைப்பாடு வெளிப்படுவதாக சமூக
நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (02.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடை

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இனிப்பு தடவிய நச்சு” என பயங்கரவாத தடை சட்டத்தினை வியாக்கியானம் செய்தது
மட்டுமல்ல தமது தேர்தல் மேடைகளில் முற்று முழுதாக அதனை அகற்றுவோம் எனக் கூறி
ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை புதிய பெயரிட்டு ஞானஸ்தானம்
கொடுக்க முனைவது நாட்டின் நலத்தை பாதுகாக்க அல்ல.

pta act

அரச பயங்கரவாதத்திற்கு தங்க
முலாம் பூசி அதிகாரத்தை தக்க வைக்கவும், அடக்கு முறையை கட்டவிழ்த்து விடவுமே
அன்றி வேறில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் மீண்டும் எந்த ஒரு வடிவிலும்
நடைமுறைக்கு வரக்கூடாது.

அதற்கு இடம் அளிக்கவும் வேண்டாம் என வடக்கு தெற்கு
சார் அனைத்து நீதி சமூகத்தையும் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புகள் மிக
மிக பயங்கரம் நிறைந்தவை.

தமிழர் இறைமை

1972 மற்றும் 78இல் தமிழர்களையும் தமிழர் இறைமையும்
ஓரம் கட்டியே அரசியல் யாப்புக்கள் கொண்டுவரப்பட்டன.

அந்த அரசியல் யாப்பு
நாட்டின் அமைதிக்கு எதிரானது. தமிழர்கள் எதிர்பார்க்கும் எந்த ஒரு அரசியல்
தீர்வையும் அடைய இடம் அளிக்காதது.

srilanka tamils

இத்தகைய யாப்பை வரைந்தவர்களும்,
பெரும்பான்மை பலத்தோடு அங்கீகரித்தவர்களும், தொடர்ந்து பாதுகாப்பவர்களும்,
மாற்றீடாக வேறொன்றை கொண்டு வருவோம் என ஏமாற்றியவர்களும் பயங்கரவாதிகளாவர்.

இவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தில்
இடமில்லை என்பதால் பயங்கரவாத தடை சட்டமும் பயங்கரவாதமே. இத்தகைய சட்டம்
நாட்டில் இருக்கக் கூடாது.

இதையொத்த சட்டம் மாற்று வடிவில் வரவும் கூடாது.
அவ்வாறு ஒரு சட்டத்தினை கொண்டு வர நினைப்பவர்களும் பயங்கரவாதிகளாகவே
அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

பயங்கரவாததடை சட்டம்

தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இவ்வாறான ஒரு
சட்டம் நாட்டில் தேவை எனும் வாதமும் முன் வைக்கப்படுகின்றது.

வல்லரசுகளாக
தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகளும் வல்லரசுகளாகத் துடிக்கும்
பயங்கரவாதிகளும் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியில் மட்டுமல்ல தேசிய
மற்றும் சர்வதேச பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டுக்குள் காலூன்றியுள்ளதோடு
நாட்டை துண்டு துண்டுகளாக தமதாக்கியும் கொண்டுள்ளனர்.

பயங்கரவாததடை சட்டம்

இந்நிலையில் அதற்கு
எதிராக குரல் கொடுப்பவர்களையும் போராட்டம் செய்பவர்களையும் பயங்கரவாதியாக்கும்
சட்டத்தினையே புதிய வடிவில் தற்போதைய ஆட்சியாளர்களும் கொண்டு வர முயல்வதாக
தெரிகிறது.

இது கடந்த கால தமது நிலைப்பாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான
பயங்கரவாதமாகும்.

இதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இவர்களை பதவியில்
அமர்த்தவுமில்லை.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அவர்களின் அமைப்புகளும் வடக்கு கிழக்கில்
நடந்தது இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை என்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதி
கேட்டும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கையில் சில
நாடுகள் அதற்கான அங்கீகாரம் கொடுத்திருக்கும் சூழ்நிலையில் இது தொடர்பில்
இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்போரையும், சர்வதேச தமிழ்
சமூகத்தோடு சேர்ந்து இயங்குபவர்களையும் பயங்கரவாதிகளுக்கும் புதிய சரத்தும்
புதிய சட்டத்தில் உள்வாங்கப்படலாம்.

இது தமிழர்களுக்கு எதிரான இன்னுமொரு
சுற்று இன அழிப்புக்கும் வித்திடலாம்.

 தமிழர்களின் அரசியல்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கோரப்பிடிக்குள்
சிக்குண்டு இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் முகம் கொடுத்த சமூகமாக ;புதிய
பயங்கரவாத சட்ட உருவாக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவையும்,
அவர்களால் முன்வைக்கப்படும் நகல் சட்டமூலத்தை யும் எதிர்ப்பதோடு அதனை
நடைமுறைபடுத்த இடமளிக்காத வகையில் மக்களுக்கான தெளிவூட்டல்கள் செய்தல்
வேண்டும்.

tamils politics

நீதி அமைச்சரோடு அவருடைய அமைச்சில் நாம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது
அரசாங்கத்திற்கு புதிய வடிவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வரவுள்ள
அவசரத்தையும், ஆர்வத்தையும் காணக்கூடியதாக இருந்தது தேசிய மக்கள் சக்தி தமது
பெரும்பான்மையை பாவித்து நாடாளுமன்றத்தில் அத்தமாக்கக்கூடிய சூழ்நிலையில்
அதற்கான எதிர்ப்பை அனைத்து தரப்பினும் வழிகாட்ட வேண்டும் இவ்வாறு
வெளிக்காட்டும் போது அதனை நடைமுறை உள்ள சட்டத்தை கொண்டு பயங்கரவாதமாகவும்
எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கலாம்.

ஆனால் நாட்டின் எதிர்காலம்
கருதியும் தமிழர்களின் அரசியல் நலன் கருதியும் எமது எதிர்ப்பை வெளி காட்ட
வேண்டும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் அதே நிலையில்
தமிழர் தாயகத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து
பாதுகாப்பதாக கூறி ” தெற்கின் எழுச்சியை அடக்கவும் எத்தனை காலம் என்பதை
எத்தனிக்கலாம்” இதனை அமைதி காத்து அங்கீகரிக்காது நீதிக்கான சமூகமாக அனைத்து
வடிவங்களிலும் எமது எதிர்பார்ப்பை திட்டமிட்டு வெளிபடுத்த வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.