கொழும்பு, கிரான்பாஸ் நாகலங் வீதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
9mm ரக கைத்துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 மற்றும் 27 வயதுடைய இருவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை கிரான்பாஸ் பொலிஸ் மற்றும் வடக்கு குற்றத்தடுப்புபிரிவினர் மேற்கொள்கின்றனர்.