இலங்கையில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் எவ்வாறு குற்றவாளிகளின் கைகளுக்கு செல்கிறது என்ற சந்தேகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு பதிலை வழங்கியுள்ளார்.
கொழும்பில் இன்று (30.10.2025) நடைபெற்ற போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதனை ஜனாதிபதி தெளிவுப்படுத்தியிருந்தார்.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் பணியாற்றிய சில காவல்துறை அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை விற்றுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியிருப்பதாக அவர் அதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறாமல் வெளியேறிய அதிகாரிகளும் பாதாள உலக குழுக்களுக்கு துப்பாக்கிகளை கைமாற்றியிருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பல விடயங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த பல்வேறு விடயங்களை எடுத்துரைக்கிறது கீழுள்ள காணொளி..
https://www.youtube.com/embed/fv0S7-phH8g

