நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது, இவர் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு குட் பேட் அக்லீ படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே கூறி இருக்கும் நிலையில், இன்னும் 7 நாள் ஷூட்டிங் எடுக்கப்படவேண்டி இருக்கிறது எனவும் கூறப்பட்டது.
கடினமாக உள்ளது.. விஜய் அரசியல் வருகை குறித்து மனம் திறந்த நடிகர் நரேன்
மேலும் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இசையமைக்க இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லீ குறித்து கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறி படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லீ படத்தின் பணிகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று கேள்வி கேட்க.
அதற்கு ஜீ.வி.பிரகாஷ்,” ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் செலிப்ரேஷன் ஆப் லைப் இசைக்கு ஒரு நடனக் காட்சியைப் படமாக்கினால் எப்படி இருக்கும்?..நன்றாக இருக்கும் அல்லவா’ என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.