சவுதி அரேபியாவில் (Saudi Arabia) புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட சுமார் 14 ஜோர்தானிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குறித்த தரப்பினர் உயிரிழந்ததாக ஜோர்தான் (Jordan) வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த யாத்திரையில் பங்கேற்ற சுமார் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹஜ் யாத்திரை
இந்த நிலையில், உயிரிழந்த ஜோர்தானியர்களுக்கு இறுதி கிரியைகளை செய்வது மற்றும் அவர்களது உடல்களை ஜோர்தானுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் யாத்திரையில் இதுவரை ஐந்து ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புனித ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் சவுதி அரேபியா இதுவரை எந்தவொரு தகவலையும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.
மேலும், இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்காக 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் மக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.