முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்கா முன்வைத்த புதிய போர் நிறுத்தம் : நிராகரிக்கும் ஹமாஸ்

அமெரிக்காவின் (United States) ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் (Hamas) நிராகரிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ல் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் (Israel) புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். 

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

போர் நிறுத்தம்

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் நடைமுறையானது.

அமெரிக்கா முன்வைத்த புதிய போர் நிறுத்தம் : நிராகரிக்கும் ஹமாஸ் | Hamas Poised To Reject Us Backed Ceasefire Propo

ஆனால், அதில் ஒப்பந்தப்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை துவக்கி உள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். 

ஹமாஸ்

இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா முன்வைத்த புதிய போர் நிறுத்தம் : நிராகரிக்கும் ஹமாஸ் | Hamas Poised To Reject Us Backed Ceasefire Propo

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவினால், முன்மொழியப்பட்ட இந்த போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில், இஸ்ரேலிய ஊடகமான ‘வல்லா’வின் அறிக்கையின்படி, ஹமாஸ் வட்டாரங்கள் இந்த திட்டத்தின் உள்ளடக்கம் குறித்து “ஏமாற்றம்” தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்

முந்தைய போர் நிறுத்த திட்டங்களை விட இது இஸ்ரேலுக்கு “சாதகமாக” இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சமநிலையற்ற நிலைப்பாடு இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

அமெரிக்கா முன்வைத்த புதிய போர் நிறுத்தம் : நிராகரிக்கும் ஹமாஸ் | Hamas Poised To Reject Us Backed Ceasefire Propo

இதன் மூலம் ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரிப்பதற்கான வாய்ப்பு மேலும் உறுதியாகியுள்ளது.

வல்லா’ மேற்கோள் காட்டியுள்ள ஒரு பெயர் குறிப்பிடப்படாத மூத்த இஸ்ரேலிய அதிகாரி, ஹமாஸின் அதிருப்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரிக்கும் என்றே இஸ்ரேல் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்