முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா விபுலானந்தா கல்லூரி மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விரைவில் விளையாட்டு மைதானம் பெற்றுக்
கொடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய
தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று(20.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தா
கல்லூரியில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அதற்கான
ஒரு நிரந்தர மைதானம் இதுவரை இல்லை.

பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

மைதானத்திற்கான
நிலம் ஒன்றினை கொள்வனவு செய்ய நீண்ட நாட்களாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள்
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை அது கைகூடவில்லை.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி | Harini Amarasuriya S Solution To School Ground

இந்நிலையில், பிரதமர் என்ற அடிப்படையில் இந்தப் பாடசாலையின்
மைதானப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகத்தால் ஹரிணி அமரசூரியவிடம் கோரப்பட்டது.

பாடசாலை தொடர்பில் கேட்டறிந்த பிரதமர் மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
காணப்படும். மாணவர்களுக்கான மைதானம் விரைவில் பெற்றுத் தருவாக இதன்போது
உறுதியளித்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மைதானப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி | Harini Amarasuriya S Solution To School Ground

இந்தச் சந்திப்பில் பிரதமருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன் மற்றும் செ.திகலகநான் ஆகியோரும் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்