பிரதமர் ஹரிணி அமரசூரிய, தமது, முன் னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளாரா என அரசியல் வட்டாரங்களில் கேள்வியெழுப்படுகின்றது.
பாடசாலை விழாக்களில் பங்கேற்க அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்று கல்வி
அதிகாரிகளுக்கு, அவர் முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர், அது போன்ற எந்த விதியும்
விதிக்கப்படவில்லை என்று கூறினார்,
ஆனால், பாடசாலை அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று
வலியுறுத்தினார்.
பிரதமர் அறிவுறுத்தல்
முன்னர், தாம் வெளியிட்ட கருத்தை, ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டன என்றும் அவர்
குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சராக பிரதமர் விதித்ததாகக் கூறப்படும் தடைக்கு மத்தியில், அரசாங்க
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை நிகழ்வுகளில் எவ்வாறு கலந்து கொள்கிறார்கள்
என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, கேள்வி எழுப்பிய போதே,
ஹரிணி, தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று, பிரதமர் அலுவலகத்திலிருந்து
வெளியான செய்திக்குறிப்பில், கல்வி அமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது,
பாடசாலை விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துமாறு பிரதமர்
அறிவுறுத்தியதாக, குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.